×

மருத்துவமனைகளில் காலிப்பணியிடத்தை உடனடியாக நிரப்பி போதிய மருந்து இருப்பை உறுதி செய்ய வேண்டும்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பி போதிய மருந்து இருப்பை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருந்து பற்றாக்குறையால் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக கிராமப்புறங்களில் கிளினிக்குகள் இல்லாததால் சாதாரண நோய்க்கு கூட சிகிச்சை பெறமுடியாமல் மக்கள் தவிப்பதாக குறிப்பிட்டார்.

எனவே கிராமப்புறங்களில் அரசு கிளினிக்குகளை திறந்திட வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி, மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை விரைந்து நிரப்பவும், இந்திய மருத்துவ கல்வி இயக்குனர் பணியிடத்தை உடனடியாக நிரப்பவும் கோரிக்கை விடுத்துள்ளார். மழைக்கால நோய்களில் இருந்து மக்களை காக்க மருந்து இருப்பை உறுதி செய்யவும் எடப்பாடி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post மருத்துவமனைகளில் காலிப்பணியிடத்தை உடனடியாக நிரப்பி போதிய மருந்து இருப்பை உறுதி செய்ய வேண்டும்: அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisamy ,Chennai ,Tamil Nadu ,Edappadi Palanisami ,Dinakaran ,
× RELATED நிலையான கொள்கையே இல்லாத கட்சி பாமக: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்