×

தீபாவளி நாளில் சோகம் புதுவையில் பெண் காவலர் தற்கொலை

*போலீசார் விசாரணை

புதுச்சேரி : புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை நாளில் பெண் காவலர் தூக்கிட்டு தற்ெகாலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் பத்துக்கண்ணு சப்தகிரி நகர் 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வினோத்(30), மின்துறை ஊழியர். இவரது மனைவி சத்யா (26). புதுவை காவல்துறையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக ஊர்க்காவல் படை காவலராக பணியாற்றி வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த காவலர் பயிற்சி தேர்வில் காவலராக தேர்வாகி ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வந்தார். வினோத், சத்யாவுக்கு கடந்த 2017ம் ஆண்டு திருமணமாகி 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதமாக சத்யாவுக்கும், கணவர் வினோத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வினோத் திருபுவனையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பத்துக்கண்ணு வீட்டில் சத்யா தன் குழந்தை மற்றும் அவரது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளியான நேற்று முன்தினம் காலை சத்யா தனது குழந்தையை திருபுவனையில் உள்ள கணவர் வீட்டில் விட்டுவிட்டு தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது, சத்யா தனது அறையில் உள்ள சீலிங் பேனில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கியுள்ளார். நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றுவிட்டு அவரது தாய் உமா மகேஸ்வரி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அறையில் சத்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உமா மகேஸ்வரி வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி நாளில் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post தீபாவளி நாளில் சோகம் புதுவையில் பெண் காவலர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : day ,Diwali ,Puduvai ,Puducherry ,Diwali festival ,
× RELATED இன்று காதலர் தினம் கொண்டாட்டம் புதுவை ஓட்டல்களில் சிறப்பு சலுகைகள்