×

அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் எலி உணவுகளை திண்ற வீடியோ வெளியான விவகாரம்: உணவு பாதுகாப்புதுறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் எலி உணவுகளை திண்ற வீடியோ வெளியான விவகாரம் தொடர்பாக உணவு பாதுகாப்புதுறை சார்பில் தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் இருக்க கூடிய அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மற்றும் வட்டார மருத்துவமனைகளில் இருக்க கூடிய கேண்டீன்களில் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:
* கேண்டீன்கள் தொடர்ந்து முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
* பூச்சிகள், விலங்குகள் எளிதில் அணுகும் வகையில், உணவகங்களுக்கு அருகில் இருக்க கூடிய துளைகள், சாக்கடைகள், மற்றும் கால்வாய்கள் போன்றவற்றை முழுமையாக மூடவேண்டும்.
* விலங்குகள், பறவைகள், செல்லபிராணிகள், உணவு நிலையம் மற்றும் வளாகத்திற்க்குள் நுழைய அனுமதிக்க கூடாது
* உணவுப்பொருட்கள் நிலப்பரப்புகளுக்கு மேலும், சுவர்களில் இருந்து விளகியும் பூச்சி எதிர்ப்பு கொள்கலனில் வைத்து மட்டுமே சேமிக்க படவேண்டும்.
* பழுதான கட்டிடங்களை உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு பூச்சிகள் மற்றும் விலங்குகள் அனுகாத அளவிற்கு கட்டிடத்தை பராமரிக்க வேண்டும்.
* அடைக்கபட்ட உணவு பொருட்களுக்கு நிர்ணயிக்கபட்ட விலையை மட்டுமே வசூலிப்பதுடன், காலாவதி காலத்திற்குள் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்
* உணவுகளை கையாள்பவர்கள் கட்டாயம் கையுறை அணிவதுடன், தலை முடி உதிராமல் இருக்க தலையுறை அணிவதும் அவசியம்
* உணவுகளை கையாள்பவர்கள் எப்போதும் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான நீரால் கழுவி கைகளை கிருமிநீக்கம் செய்யவேண்டும்.
* உணவுகளை கையாள்பவர்கள் புகைபிடித்தல், எச்சில் துப்புதல், தும்முதல் போன்றவற்றை தவிற்க்க வேண்டும்.
* உணவு பொருட்களை சேமித்து வைக்க கூடிய இடங்கள் உணவங்களில் இருந்து தனியாவும் Fssai விதிமுறைகளுக்கு ஏற்றவாறு பூச்சிகள் மற்றும் விலங்குகள் நெறுங்காத அறைகளில் சேமிக்க வேண்டும்

போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்புதுறை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றபடுகிறதா என்பதை சம்பந்தபட்ட மருத்துவமனை முதல்வர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் வழியுறுத்தபட்டுள்ளது.

The post அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் எலி உணவுகளை திண்ற வீடியோ வெளியான விவகாரம்: உணவு பாதுகாப்புதுறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,food safety ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில்...