×

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்: பிரதமர் ரிஷி சுனக் அதிரடி

லண்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேனை டிஸ்மிஸ் செய்து பிரதமர் ரிஷிசுனக் உத்தரவிட்டுள்ளார்.இங்கிலாந்து பிரதமராக இருக்கும் ரிஷிசுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் சுயெல்லா பிரேவர்மேன். 43 வயதான இவரும் இந்தியாவில் கோவாவை பூர்வீகமாக கொண்டவர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் தொடர்பாக லண்டன் போலீசார் பற்றி சுயெல்லா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போலீசார் நடந்து கொள்வதாகவும், அவர்களுக்கு ஆதரவான போராட்டத்திற்கு மட்டும் அதிக அனுமதி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் போலீசார் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து,’எங்கள் துணிச்சலான காவல்துறை அதிகாரிகள் லண்டனில் போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகளை கண்ணியமான முறையில் எதிர்கொள்கிறார்கள்’ என்று விளக்கம் அளித்தார்.

இருப்பினும் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக உள்துறை அமைச்சர் சுயெல்லாவை டிஸ்மிஸ் செய்ய பிரதமர் ரிஷிசுனக் முடிவு செய்தார். நேற்று முறைப்படி சுயெ ல்லாவை டிஸ்மிஸ் செய்து ரிஷிசுனக் நடவடிக்கை எடுத்தார். அவருக்கு பதிலாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேம்ஸ் க்ளெவர்லி (54) புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் அறிவிக்கப்பட்டுள்ளார். சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுனக்கின் அமைச்சரவை மீண்டும் மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* வெளியுறவுத்துறை அமைச்சரான முன்னாள் பிரதமர் கேமரூன்

இங்கிலாந்து நாட்டில் பிரதமராக பதவி ஏற்றவர்கள் அதன்பின் அமைச்சராக பதவி ஏற்பது வழக்கம் இல்லை. ஆனால் நேற்று முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் வழக்கத்திற்கு மாறாக ரிஷிசுனக் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் கேமரூன் 2010 முதல் 2016ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் பிரதமராக இருந்தார். பிரெக்சிட் ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியை விட்டு விலகினார். இப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் அடுத்த 5 நாள் பேச்சுவார்த்தையை கேமரூன் நடத்துவார் என்று தெரிகிறது.

The post இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்: பிரதமர் ரிஷி சுனக் அதிரடி appeared first on Dinakaran.

Tags : UK ,Home Minister Suella Braverman ,Rishi Sunak ,London ,Home Minister ,Suella Braverman ,Dinakaran ,
× RELATED நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்!