×

ஆண்டு இறுதி தரவரிசை 8வது முறையாக ஜோகோவிச் நம்பர் 1

டுரின்: நிட்டோ ஏடிபி பைனல்ஸ் தொடரின் லீக் ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹோல்கர் ரூனேவை வீழ்த்திய செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச், 8வது முறையாக ஆண்டு இறுதி தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டாப் 8 வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் ஹோல்கருடன் மோதிய ஜோகோவிச் 7-6 (7-4), 6-7 (1-7), 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். இந்த வெற்றியை அடுத்து, ஆண்டு இறுதி ஏடிபி ஒற்றையர் தரவரிசையில் ஜோகோவிச் 8வது முறையாக நம்பர் 1 அந்தஸ்தை உறுதி செய்து சாதனை படைத்தார். இவர் ஏற்கனவே 2011, 2012, 2014, 2015, 2018, 2020, 2021ல் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். ஏடிபி பைனல்ஸில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் இத்தாலியின் யானிக் சின்னர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாசை வீழ்த்தினார்.

The post ஆண்டு இறுதி தரவரிசை 8வது முறையாக ஜோகோவிச் நம்பர் 1 appeared first on Dinakaran.

Tags : Djokovic ,Turin ,Novak ,Denmark ,Holger Rooney ,Nito ATP Finals series ,Dinakaran ,
× RELATED அல்கராஸ் மீண்டும் சாம்பியன்: பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்