×

பில்லி ஜீன் கிங் கோப்பை: கனடா சாம்பியன்

செவில்லா: பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிர் டென்னிஸ் தொடரில் கனடா அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஸ்பெயினின் செவில்லா நகரில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் இத்தாலி அணியுடன் மோதிய கனடா ஒற்றையர் ஆட்டங்களில் 2-0 என்ற கணக்கில் வெற்றியை வசப்படுத்தி பில்லி ஜீன் கிங் கோப்பை தொடரின் 60 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அந்த அணியின் 18 வயது இளம் வீராங்கனை மரினா ஸ்டாகுசிக் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் இத்தாலியின் மார்டினா ட்ரெவிசானை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவோலினியை எளிதாக வென்றார்.

The post பில்லி ஜீன் கிங் கோப்பை: கனடா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Billy Jean King Cup ,Kanada ,Sevilla ,Canada ,Billy Jean King Cup Women's Tennis Series ,Seville, Spain ,Dinakaran ,
× RELATED பிரபல ரவுடி கொலையில் திடுக் தகவல்...