×

எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் 3வது முறையாக மண் பரிசோதனை

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம், தோப்பூரில் ரூ.1977.8 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் நாட்டின் நிதி உதவியோடு சுமார் 224 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. கடந்த 2018ல் அறிவிக்கப்பட்டு 2019 ஜனவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணிகள் துவங்காமல் இருந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் சுமார் ரூ.2 கோடி செலவில் தற்காலிக நிர்வாக அலுவலகம் அமைக்கப்பட்டது. எய்ம்ஸ் கட்டிட பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களை தேர்ந்தெடுக்க முதல்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது 3வது முறையாக எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தில் மண் பரிசோதனை பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த இடத்தை கடந்த 2018 ஜூலை மாதம் மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் எச்ஐடிஇஎஸ் எனும் இந்திய மருத்துவ கட்டுமான பணிகள் நிறுவனத்தை சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.தொடர்ந்து அக்குழுவின் பரிந்துரைப்படி 2018 செப்டம்பர் மாதம் முதல் கட்டமாக மண் மற்றும் கல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நாக்பூரில் உள்ள மத்திய மண் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் 2ம் கட்டமாக கடந்த 2019 நவம்பர் மாதம் மீண்டும் கல் மற்றும் மண் மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டு மத்திய மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது 3வது முறையாக கடந்த ஒரு வார காலமாக மீண்டும் மண் பரிசோதனை துவங்கி நடந்து வருகிறது.

The post எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில் 3வது முறையாக மண் பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : AIIMS ,Tiruparangunram ,Madurai District, Thopur ,Japan ,
× RELATED எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி: நிபுணர் குழு பரிந்துரை