×

மருதாநதி அணை பாசன வாய்க்காலில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி: பாசனத்திற்காக அய்யம்பாளையம் மருதாநதி அணை பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 72 அடியாகும். நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. அணையில் தற்போது 180 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 132 கனஅடி தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் பிரதான வாய்க்காலில் 110 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. பாசனத்திற்காக மருதாநதி அணையிலிருந்து வடக்கு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தற்போது வடக்கு வாய்க்காலில் 22 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு பின்பு வடக்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், ‘கனமழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், மருதாநதி அணையின் வடக்கு வாய்க்காலில் 22 கனஅடிவீதம் தண்ணீர் திறக்கப்படுள்ளது. இதனை தொடர்ந்து விரைவில் தெற்கு வாய்க்காலிலும் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளது. இதன்மூலம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்’ என்றனர்.

The post மருதாநதி அணை பாசன வாய்க்காலில் நீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Marudhanadi Dam ,Pattiveeranpatti ,Ayyampalayam Marudhanadi dam ,Dindigul District ,Dinakaran ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த...