×

ராஜ்மா இனிப்பு சுண்டல்

தேவையானவை:

ராஜ்மா – 1 கப்,
சர்க்கரை சேர்த்த கோவா – ¼ கப்,
கொப்பரை துருவல்,
முந்திரி,
பாதாம் துருவல் – தலா 1 டேபிள்ஸ்பூன்,
ஏலத்தூள் – சிறிது,
நெய் – 2 டீஸ்பூன்,
அரிசிமிட்டாய் அல்லது ஜெம்ஸ் மிட்டாய் கொஞ்சம்.

செய்முறை:

ராஜ்மாவை முந்தைய நாள் இரவே ஊறவைத்து மறு நாள் துளி உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும், நீரை வடிக்கவும். கடாயில் நெய்விட்டு வேகவைத்த ராஜ்மா, தேங்காய் துருவல், ஏலத்தூள், உதிர்த்த கோவா, முந்திரி, பாதாம் துருவல் ேசர்த்து கிளறி இறக்கி, அரிசி மிட்டாய் அல்லது ஜெம்ஸ் சேர்த்து கலக்கி பரிமாறவும்.

The post ராஜ்மா இனிப்பு சுண்டல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED வணக்கம் நலந்தானே!