பாங்காக்: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மியான்மர் நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மியான்மரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக இருந்த ஆங் சாங் சூகி கடந்த 2021ம் ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதன் பிறகு ராணுவம் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மியான்மர் நாட்டின் ஆளும் நிர்வாக கவுன்சிலின் உறுப்பினராகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் லெப்.ஜெனரல் சோ ஹட்டுட். ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டங்களை ஒடுக்கியதில் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இவர் பதவியில் இருந்த போது, தனக்கு நெருக்கமான கம்பெனியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளார். அதே போல் லஞ்சம் வாங்கியதாகவும்,உள்துறை அமைச்சகத்தின் ஊழியர் நல நிதியில் மோசடி செய்ததாக சோ ஹட்டுட் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை விசாரித்த ராணுவ நீதிமன்றம் ஜெனரல் சோ ஹட்டுட்டுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
The post முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
