×

கேரள அரசுக்கு எதிராக கடிதம் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை

திருவனந்தபுரம்: ஆலப்புழா அருகே தகழியில் கடன் தொல்லை காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தகழி பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (51). விவசாயியான இவர் வங்கியில் கடன் வாங்கியிருந்தார். அரசுக்கு நெல் கொடுத்ததின் மூலம் இவருக்கு லட்சக்கணக்கில் பணம் பாக்கி இருந்தது. ஆனால் பல வருடங்களாக இந்தப் பணம் இவருக்கு கிடைக்கவில்லை. இதனால் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் விஷம் குடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். தன்னுடைய தற்கொலைக்கு கேரள அரசு தான் காரணம் என்று இவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
கடன் தொல்லை காரணமாக விவசாயி பிரசாத் தற்கொலை செய்து கொண்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான், எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் கூறுகையில்,கேரள அரசு வீண் ஆடம்பர செலவில் தான் கவனம் செலுத்துகிறதே தவிர மக்களுக்கு தேவையான எந்த திட்டங்களும் நிறைவேற்றுவதில்லை. விவசாயியின் தற்கொலைக்கு கேரள அரசின் அலட்சியம் தான் காரணமாகும் என்றார்.கவர்னர் நேரில் அஞ்சலி: கவர்னர் ஆரிப் முகம்மது கான் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள விவசாயி பிரசாத்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

The post கேரள அரசுக்கு எதிராக கடிதம் கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kerala Govt ,Thiruvananthapuram ,Daghazi ,Alappuzha ,Kerala ,
× RELATED கேரள அரசு டாக்டருக்கு 2 ஆண்டு சிறை