×

ம.பியில் மீண்டும் ஆட்சி அமைத்தால் ரூ.450க்கு காஸ் சிலிண்டர்; பெண்களுக்கு இலவச கல்வி: பாஜவின் கவர்ச்சி வாக்குறுதிகள்

போபால்: மத்தியபிரதேசத்தில் மீண்டும் பாஜ ஆட்சி அமைத்தால் ரூ.450க்கு எரிவாயு சிலிண்டர், பெண்களுக்கு இலவச கல்வி உள்ளிட்ட கவர்ச்சி வாக்குறுதிகளை பாஜ அறிவித்துள்ளது. மத்தியபிரதேசத்தில் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள 230 தொகுதிகளுக்கும் வரும் 17ம் தேதி ஒரேகட்டமாக பேரரைவ தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள பாஜவும், மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரசும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. 59 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் அண்மையில் வௌியிட்டது.

இந்நிலையில் ஆளும் பாஜ அரசின் 96 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், மாநில பாஜ தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் கூட்டாக வௌியிட்டனர். அதில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை பாஜ அறிவித்துள்ளது. பாஜ தேர்தல் அறிக்கையில், “மத்தியபிரதேசத்தில் பாஜ மீண்டும் ஆட்சி அமைத்தால் அன்பு சகோதரி, பிரதமரின் எரிவாயு இணைப்பு திட்டங்களின்கீழ் ரூ.450 மானிய விலையில் எரிவாயு இணைப்பு, ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு முதுநிலை வரை இலவச கல்வி, மாணவர்களுக்கு 12ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படும்.

குறைந்தபட்சம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேலை அல்லது சுயதொழில் செய்ய வாய்ப்பு, கோதுமை ஒரு குவிண்டால் ரூ.2,700க்கும், நெல் ஒரு குவிண்டால் ரூ.3,100க்கும் கொள்முதல் செய்யப்படும், மத்தியபிரதேச தொழில்நுட்ப நிறுவனம், மருத்துவ அறிவியல் நிறுவனம் கட்டப்படும்” என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

The post ம.பியில் மீண்டும் ஆட்சி அமைத்தால் ரூ.450க்கு காஸ் சிலிண்டர்; பெண்களுக்கு இலவச கல்வி: பாஜவின் கவர்ச்சி வாக்குறுதிகள் appeared first on Dinakaran.

Tags : BJP ,Bhopal ,BJP government ,Madhya Pradesh ,Dinakaran ,
× RELATED மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசை...