×

காதலியிடம் பேசியதால் ஆத்திரம்: 12ம் வகுப்பு மாணவனின் விரலை துண்டாக வெட்டிய வாலிபர்

புதுடெல்லி: தனது காதலியிடம் பேசியதால் ஆத்திரம் அடைந்த வாலிபர் 12ம் வகுப்பு மாணவனின் விரலை துண்டாக வெட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.டெல்லி துவாரகாவில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவரும் இதே பள்ளியில் முன்பு படித்து முடித்து விட்டு சென்ற மாணவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருடன் அந்த மாணவி நட்பாக பேசியுள்ளார்.

இது மாணவியின் காதலனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் 12ம் வகுப்பு மாணவனை கடந்த 21ம் தேதி அங்குள்ள பூங்காவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.இதையடுத்து மாணவரும் அங்கு சென்றுள்ளார். பின்னர் மாணவியிடம் பேசியது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் காதலன், அந்த மாணவரை கல்லால் சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும், அவரது விரலையும் துண்டாக வெட்டி உள்ளார்.

பின்னர் மாணவியிடம் இனி பேசக்கூடாது என்று எச்சரித்துவிட்டு காதலன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து வீட்டிற்கு சென்றபோது விரல் துண்டானது குறித்து மாணவனிடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு சைக்கிள் செயின் சக்கரத்தில் மாட்டியதால் விரல் துண்டானதாக அவன் கூறியுள்ளான். இந்தநிலையில் சில நாட்களுக்கு பிறகு பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட மாணவன் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியிடம் பேசியதால் 12 வகுப்பு மாணவனின் கை விரல் வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post காதலியிடம் பேசியதால் ஆத்திரம்: 12ம் வகுப்பு மாணவனின் விரலை துண்டாக வெட்டிய வாலிபர் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,
× RELATED கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்...