×

மடப்புரம் காளியம்மன் கோயிலில் தங்க கொலுசு திருடிய அதிகாரி சஸ்பெண்ட்

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் பணம் எண்ணும்போது தங்க கொலுசு திருடிய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில்களில் கடந்த 8ம் தேதி, ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் தக்கார் பிரதிநிதி மூலலிங்கம், ஆய்வர் அய்யனார், மடப்புரம் கோயில் செயல் அலுவலர் வில்வமூர்த்தி ஆகியோர் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது உண்டியலில் காணிக்கையாக செலுத்திய 2 தங்க கொலுசுகள் கணக்கில் வரவில்லை. இதுகுறித்து சிசிடிவி பதிவை ஆய்வு செய்தபோது மடப்புரம் கோயில் செயல் அலுவலர் வில்வமூர்த்தி கொலுசை திருடியது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து அறநிலையத்துறை அரசு செயலர் மணிவாசன், செயல் அலுவலர் வில்வமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post மடப்புரம் காளியம்மன் கோயிலில் தங்க கொலுசு திருடிய அதிகாரி சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Madhapuram Kaliamman temple ,Tiruppuvanam ,Madhapuram Bhadrakaliamman temple ,Sivagangai district ,Madappuram Kaliyamman temple ,
× RELATED மின்வாரிய அலுவலகத்தில் கணினி பல மாதமாக முடக்கம்