×

இளைஞர்களுடன் டென்னிஸ் விளையாடும் புதுவை முதல்வர்: வீடியோ வைரல்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி டென்னிஸ் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பொழுதுபோக்கு டென்னிஸ் விளையாடுவதுதான். அரசியலில் ஆட்சியில் இருக்கும் போதும், இல்லாதபோதும் டென்னிஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். 73 வயது ஆகியும் இளைஞர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், காலை மாலை என இரு வேளைகளிலும் முதல்வர் டென்னிஸ் விளையாடி வருகிறார்.

ரங்கசாமி தனது உடல் ஆரோக்கியத்துக்கு, இந்த விளையாட்டுதான் முக்கிய காரணம் என பலமுறை சொல்லியிருக்கிறார்.அரசியலில் பல நெருக்கடிகள் வரும்போதும்கூட, ஆதரவாளர்கள் பரபரப்புடன் காணப்பட்டாலும், எந்தவித சலனமும் இல்லாமல், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வரை டென்னிஸ் விளையாடிவிட்டுத்தான் அடுத்த விவகாரங்கள் பற்றி ஆலோசிப்பார்.

சில நேரங்களில் இந்த குணம் விவாத பொருளானாலும் அதை பற்றிக்கவலைப்படாமல் விளையாட்டில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அதேபோல் நேற்று கோரிமேடு டென்னிஸ் மைதானத்தில் இளைஞர்களுடன் சேர்ந்து ஒரு மணி நேரம் ஆர்வமுடன் டென்னிஸ் விளையாடினார். எதிரில் விளையாடுபவர்களை பார்த்து, எனக்காக மெதுவாக ஆடக்கூடாது, இயல்பாக விளையாட வேண்டும் எனக்கூறி பந்தை லாவகமாக மறுபுறம் திருப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post இளைஞர்களுடன் டென்னிஸ் விளையாடும் புதுவை முதல்வர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,CM ,Chief Minister ,Rangaswamy ,Rangasamy ,Dinakaran ,
× RELATED சட்டமன்றம் கட்ட கவர்னர் தடை- சபாநாயகர்...