×

கடைசி லீக் போட்டியில் நாளை நெதர்லாந்துடன் இந்தியா மோதல்: பெங்களூருவில் சரவெடி காத்திருக்கு…

பெங்களூரு: 13வது ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்.5ம் தேதி தொடங்கியது. இதில் நாளையுடன் லீக் சுற்று முடிகிறது. இதுவரை 42 லீக் போட்டிகள் முடிந்துள்ளது. நாளை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டியில் தொடரை நடத்தும் இந்தியா, கத்துக்குட்டி நெதர்லாந்துடன் மோதுகிறது. 8 போட்டியிலும் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. நடப்பு உலக கோப்பையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஒரே அணியான இந்தியா அதனை தக்க வைக்கும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் விராட் கோஹ்லி 543, ரோகித்சர்மா 442 ரன் அடித்து முதுகெலும்பாக உள்ளனர்.

இவர்களுடன் ஸ்ரேயாஸ் 293, கே.எல்.ராகுல் 254 ரன் எடுத்து மிடில் ஆர்டரில் வலு சேர்க்கின்றனர். பேட்டிங்கை விட பவுலிங் மிரட்டலாக உள்ளது. ஷமி 16, பும்ரா 15, ஜடேஜா 14, குல்தீப் 12, சிராஜ் 10 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். தீபாவளி பண்டிகையான நாளை பெங்களூருவில் வானவேடிக்கை நிகழ்த்த இந்தியா காத்திருக்கிறது. மறுபுறம் நெதர்லாந்து 8 போட்டியில் தென்ஆப்ரிக்கா, வங்கதேசத்திற்கு எதிராக வெற்றி, 6 தோல்வியுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இழப்பதற்கு ஒன்றும் இல்லை என்ற நிலையில் நம்பர் 1 அணியான இந்தியாவுடன் மோத வாய்ப்பு கிடைத்ததே வீரர்களுக்கு பெரிய நிகழ்வாக இருக்கும். இருப்பினும் வலுவான இந்தியாவுக்கு எதிராக தாக்குப்பிடித்து நெருக்கடி கொடுக்கும் முனைப்பிலும் உள்ளது.

The post கடைசி லீக் போட்டியில் நாளை நெதர்லாந்துடன் இந்தியா மோதல்: பெங்களூருவில் சரவெடி காத்திருக்கு… appeared first on Dinakaran.

Tags : India ,Netherlands ,Saravedi ,Bengaluru ,Bangalore ,13th ICC World Cup Cricket Series ,Dinakaran ,
× RELATED சிவகாசி அருகே நெடுங்குளம்...