×
Saravana Stores

சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை : சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மின் பயன்பாட்டை பொறுத்து 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை பீக் அவர்ஸ் மின்கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசாணையில், “சிறு, குறு நிறுவனங்களில் மின் பயன்பாட்டை பொறுத்து 15 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை பீக் அவர்ஸ் மின்கட்டணத்தை குறைக்கப்படும். குறைக்கப்பட்ட மின் கட்டணங்களுக்கான கூடுதல் மானியமாக ரூ.145 கோடி மானியம் வழங்கப்படும்.

ரூ.145 கோடி மானியம் வழங்கப்படுவதன் மூலம் 3.37 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை நுகர்வோர்கள் பயன்பெறுவர்.சோலார் மேற்கூரை மின் உற்பத்தி நெட்வர்க் கட்டணமும் 50% குறைக்கப்படும்.சோலார் நெட் ஒர்க் மின் கட்டண குறைப்பிற்கு கூடுதல் மானியமாக ரூ.7.30 கோடி வழங்கப்படும்.சூரிய ஒளி மின் சக்தி மேற்கூரை மின் உற்பத்தி செய்ய மின் இணைப்புகளுக்கு 15% மூல தன மானியம் வழங்கப்படும்.ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் வரை உச்சபட்ச நேர மின் நுகர்வு கட்டணம் ஒத்திவைக்கப்டுகிறது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மின் கட்டணம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின்கட்டணத்தை குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED இளைஞர்களை கவரும் வகையில் புதிய சேவை.....