×

மரக்கன்று நடும் விழா

 

காரிமங்கலம், நவ.11: காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கும்பாரஅள்ளி ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஏரிக்கரையில் மரக்கன்று நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து தலைவர் கௌரி திருக்குமரன் தலைமை வகித்தார். ஊர் கவுண்டர்கள் பழனி, முருகன், கணேசன், ராஜா, பாண்டு, சேட்டு, முன்னாள் தலைவர் முருகன், சென்னகேசவன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் பழனியம்மாள் பழனி வரவேற்றார்.

பிடிஓ கலைவாணி ஏரிக்கரையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஏரிக்கரையில் தென்னை, ஜம்பு, நாவல், நெல்லி, கொய்யா உட்பட 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் பெரியண்ணன், டேங்க் ஆபரேட்டர் சங்க தலைவர் ராஜேந்திரன், குப்பன், வக்கீல் கோகுல கண்ணன், காளியம்மன் நற்பணி மன்றம் அன்பு, வெங்கடாசலம், பஞ்சாயத்து செயலாளர் சிங்காரவேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

The post மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Panchayat ,Union ,Kumbaralli Panchayat ,Karunanidhi ,
× RELATED மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்