×

தர்காவில் சிசிடிவி கேமராக்களை உடைத்து திருட்டு முயற்சி போலீசார் விசாரணை

 

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே உள்ள தர்காவில் சிசிடிவி கேமராக்களை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே புகழ்பெற்ற சைதானி பீ தர்கா உள்ளது. இங்கு உடல்நலம் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு பரிகாரம் செய்தல், கயிறு கட்டுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன. வழக்கமாக தினசரி இரவில் சுமார் 9.30 மணியளவில் தர்கா மூடப்படுவது வழக்கம். இங்கு பணி செய்து வரும் 2 பேர், இரவில் தர்காவிலேயே தங்குவார்கள். அவர்கள் இருவரும் ஊருக்கு சென்றதால் நேற்று முன்தினம் இரவு தர்காவில் யாரும் இல்லை என தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தர்காவுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 4 சிசிடிவி கேமராக்களை உடைத்து முட்புதரில் வீசியுள்ளனர். பின்னர் தர்காவுக்குள் சென்று அங்கிருந்த உண்டியல்களை உடைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் ஆத்திரத்தில் தர்காவுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி மற்றும் டியூப் லைட்டுகளை உடைத்து விட்டு சென்றுள்ளனர். இதற்கிடையில் நேற்று வழக்கம்போல் தர்காவுக்கு வந்த நிர்வாகிகள், நடந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து வருகின்றனர்.

 

The post தர்காவில் சிசிடிவி கேமராக்களை உடைத்து திருட்டு முயற்சி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Darga ,Dharga ,Anna Kalayarangam ,Vellore ,Vellore… ,Dinakaran ,
× RELATED காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை