×

சூரசம்ஹார மேடை அருகே சிதிலமடைந்த விநாயகர் கோயில் புதுப்பிக்க கோரிக்கை

 

உடன்குடி, நவ. 11: திருச்செந்தூரில் சூரசம்ஹார மேடை அருகே சிதிலமடைந்த விநாயகர் கோயிலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதுதொடர்பாக நுகர்வோர் பேரவை திருச்செந்தூர் கோயில் இணை ஆணையரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சூரசம்ஹார மேடை அருகே உள்ள விநாயகர் கோயில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கந்தசஷ்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்போது இந்த விநாயகருக்கும் தீபாராதனை நடைபெறும். எனவே துரிதமாக கோயிலை புதுப்பிக்க வேண்டும். கோயில் பஸ் நிலையத்திற்கு அரசு பேருந்துகள் வராததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே கோயில் நிதியில் இருந்து கோயில் பஸ் நிலையத்தில் இருந்து பகத்சிங் பேருந்து நிலையத்திற்கு சர்குலர் பஸ் விட வேண்டும். வடக்குரத வீதி மற்றும் சன்னதி தெருவில் உள்ள கோயிலுக்கு சொந்தமான காலியிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்குமிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

The post சூரசம்ஹார மேடை அருகே சிதிலமடைந்த விநாயகர் கோயில் புதுப்பிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Surasamhara platform ,Udengudi ,Vinayagar temple ,Tiruchendur ,
× RELATED மழு பொறுத்த விநாயகர்