×

தூத்துக்குடி மாவட்டத்திற்கு 18ம்தேதி உள்ளூர் விடுமுறை

 

தூத்துக்குடி, நவ. 11: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு வரும் 18ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் 18ம்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுமுறை பொருந்தாது. இது செலாவணி முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக டிசம்பர் 9ம் தேதி (சனிக்கிழமை) மாற்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

The post தூத்துக்குடி மாவட்டத்திற்கு 18ம்தேதி உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : 18th ,Tuticorin district ,Thoothukudi ,Tiruchendur Subramania Swamy Temple ,Surasamharat ,Dinakaran ,
× RELATED கம்பம்மெட்டு சாலையில் சீரமைப்பு பணி துவங்கியது