×

மரம் விழுந்து உயிரிழப்பு உள்ளிட்ட விபத்துகளில் பலியானவர்களின் குடும்பத்திற்கு சமச்சீரான இழப்பீடு: விதிகளை வகுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  சாலையில் சென்ற போது மரம் விழுந்த இரு வேறு விபத்துகளில் பலியான முதியவர் மற்றும் சிறுவனின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வி.அருண் ஆஜராகி, இதுபோன்ற விபத்துகளில் பலியாகும் நபர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. மாநகராட்சி மட்டுமல்லாமல், அனைத்து பகுதிகளுக்கும் இந்த நிவாரணம் வழங்கப்படுகிறது என்றார். இதையடுத்து, நீதிபதி, பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஒரு சில நிகழ்வுகளில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படுகிறது. சில நிகழ்வுகளில் 50 லட்சம், 10 லட்சம், ஒரு லட்சம் என இழப்பீடுகள் வழங்கப்படுகிறது. இந்த பாரபட்சத்தை தவிர்க்க, பொது இடங்களில் ஏற்படும் விபத்துகளில் பலியாவோருக்கு இழப்பீட்டை தீர்மானிக்க 8 வாரங்களில் உரிய விதிகளை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.  மேலும், இழப்பீடு கோரி 12 வாரங்களில் அரசுக்கு மனுதாரர் விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பங்கள் மீது  புதிய விதிகள் அறிவிக்கப்பட்ட 8 வாரங்களில் அரசு முடிவை அறிவிக்க வேண்டும். அரசு வழங்கும் இழப்பீடு என்பது பாதிக்கப்பட்டோர் காப்பீடு கோர தடையாக இருக்காது. உள்கட்டமைப்புகளை முறையாக பராமரித்து இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் உத்தரவிட்டார்….

The post மரம் விழுந்து உயிரிழப்பு உள்ளிட்ட விபத்துகளில் பலியானவர்களின் குடும்பத்திற்கு சமச்சீரான இழப்பீடு: விதிகளை வகுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : EC ,Chennai ,
× RELATED டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில்...