×

கீழையூர் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

ஒரத்தநாடு,நவ.11: ஒரத்தநாடு அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு ஒரத்தநாடு தீயணைப்பு துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.தஞ்சாவூர் மாவட்டம், ஒருத்தனோட அருகே உள்ள திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்துறை சார்பாக ”விபத்தினை தவிர்ப்போம் விழிப்புடன் இருப்போம் விபத்தில்லா தீபாவளி வீடு தோறும் மகிழ்ச்சி” என்ற தலைப்பின் கீழ் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது. மாணவர்கள் தீபாவளி தினத்தன்று பாதுகாப்பாக வெடி வெடிப்பது எவ்வாறு என்று மிகவும் அழகாக விவரித்து பட்டாசு வெடிக்கும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன்படி வெடி வெடிக்கும் போது மாணவர்கள் கதர் ஆடைகளை அணிந்தும் அருகே இரண்டு வாழியில் நீர் நிறைத்து கொண்டும் அருகில் பெரியவர்களை அமர வைத்துக் கொண்டும் வெடி வெடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. வீடுகளுக்கு உள்ளே வெடி வெடிக்க கூடாது கைகளுக்கு அருகே கைகளில் வைத்துக்கொண்டும் வெடி வெடிக்க கூடாது என்றும் எடுத்துக் கூறப்பட்டது. மேலும் வடகிழக்கு பருவமழையின் போது நீர் நிலைகளில் உயிருக்காக போராடுபவர்களை எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு எவ்வாறு உயிரை காப்பது என்பது குறித்து தீயணைப்பு வீரர்களால் செயல்முறை விளக்கம் மிகச் சிறப்பாக நடித்துக் காட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை வளர்மதி, உதவி தலைமை ஆசிரியர் திருக்குமரன், முதுகலை ஆசிரியர் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் செய்திருந்தார்.

The post கீழையூர் அரசு பள்ளியில் விபத்தில்லா தீபாவளி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Geeyoor Government School ,Orathanadu ,fire department ,Tirumangalakottai Geehoyur Government High School ,
× RELATED ஓரத்தநாடு அருகே வட்டி வசூல் செய்ய...