×

பேராசிரியர் வீட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு

 

திண்டிவனம், நவ. 11: திண்டிவனத்தில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரூபாய் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம் மயிலம் ரோடு இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் பாஸ்கர்(54), இவர் சென்னை அண்ணா பல்கலையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு வருட காலமாக சென்னை முகப்பேர் எவரெஸ்ட் காலனியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.  திண்டிவனத்தில் உள்ள இவரது வீட்டில் பணிபுரியும் பெண் ஒருவர் தினமும் வந்து வீட்டை சுத்தம் செய்வது வழக்கம்.

இதேபோல் நேற்று முன்தினம் வீட்டு வாசலை சுத்தம் செய்ய வந்தபோது, வீட்டில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளர் பாஸ்கருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டை வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, ரூ.1 லட்சம் பணம், வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post பேராசிரியர் வீட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Dindivan ,Dinakaran ,
× RELATED தீவினைகள் தீர்த்தருள்வார் தீவனூர் விநாயகர்