×

நாகர்கோவில் மாநகர பகுதியில் குப்பைகள் அகற்ற 48 மினி டெம்போ

 

நாகர்கோவில், நவ. 11: நாகர்கோவில் மாநகர பகுதியில் குப்பைகள் அகற்ற 48 மினி டெம்போ வந்துள்ளது. அதனை குப்பைகளை அகற்றும் தனியாரிடம் மாநகராட்சி வாடகைக்கு விடவுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகர பகுதியில் உள்ள 11 நுண்ணுரம் செயலாக்கம் மையங்கள் மூலம் உரமாக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள குப்பைகள் வலம்புரிவிளையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

அங்கு குவியும் குப்பைகளும் பயோமைனிங் முறையில் அகற்றும் பணி நடந்து வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டு வந்தது. தற்போது தனியார் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சேகரிக்கப்படும் குப்பைக்கு ஏற்ற வகையில் பணத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.

இதற்கான மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்த வாகனங்கள் தனியாரிடம் வழங்கப்பட்டது. அதற்கு குப்பைகள் அகற்ற டென்டர் எடுத்தவர்கள் வாடகை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு 15வது நிதிகுழு மானியத்தில் 40 மினி டெம்போ வந்துள்ளது. மேலும் 8 மினி டெம்போக்கள் வரவுள்ளது. இந்த மினிடெம்போக்களை குப்பைகள் சேகரிக்கும் தனியாரிடம் வாடகைக்கு விடப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நாகர்கோவில் மாநகர பகுதியில் குப்பைகள் அகற்ற 48 மினி டெம்போ appeared first on Dinakaran.

Tags : METROPOLITAN ,NAGARGO ,NAGARCO ,METROPOLITAN AREA ,Nagarko ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளுக்கு பின் கைதான நாகர்கோவில்...