×

கார் டிரைவருக்கு பணத்தை திரும்பசெலுத்தாத பைனான்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்

 

நாகர்கோவில், நவ. 11: தென்தாமரைகுளம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். வாடகைக்கு கார் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவர் தனியார் பைனான்சில் கடன்பெற்று வாகனம் ஒன்றை வாங்கினார். கடன் தொகை 59 மாதங்களில் மாதம் ரூ.15 ஆயிரத்து 650 என மொத்தம் ரூ.9 லட்சத்து 23 ஆயிரத்து 350 செலுத்தி முடிக்க வேண்டியதாகும். இதனை தவிர மாதத்தவணையுடன் பிடித்தம் செய்யப்படும் காப்பீட்டுத்தொகை, ஆண்டின் கடைசியில் ரூ.26 ஆயிரம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

2016-17ம் ஆண்டு தொகையளவில் ரூ.26 ஆயிரத்து 408 செலுத்திவிட்டு, பிடித்தம் செய்யப்பட்ட இன்சூரன்ஸ் தொகையை கடன் தொகையில் குறைவு செய்ய தர்மராஜ் கேட்டுள்ளார். பல முறை கேட்டபிறகு ரூ.26 ஆயிரத்துக்கு பதிலாக ரூ.5436 குறைவு செய்து ரூ.20 ஆயிரத்து 464 கொடுத்துள்ளனர். குறைவு செய்யப்பட்ட தொகை கேட்டு மீண்டும் பலமுறை அலைந்த பின்னர் ரூ.3439 மட்டும் வரவு செய்துள்ளனர். அதில் ரூ.1997 இழப்பாகியுள்ளது.

இதனை தொடர்ந்து தர்மராஜ் தனக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டத்திற்கு நிவாரணம் வேண்டி கன்னியாகுமரி ஜில்லா நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் தாமசிடம் புகார் மனு கொடுத்தார். மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் சுரேஷ், உறுப்பினர் நாகேந்திரன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் பைனான்ஸ் நிறுவனத்தின் சேவை குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி குறைவு செய்யப்பட்ட தொகை ரூ.1997யை வழக்கு பதிவு செய்த 2018 செப்டம்பர் முதல் 6 சதவீதம் வட்டியுடன் வழங்கவேண்டும், மன உளைச்சலுக்கு நிவாரணம் ரூ.10 ஆயிரம், வழக்குச்செலவு ரூ.2500 ஆகியவற்றையும் 4 வார காலத்திற்குள் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனர்.

The post கார் டிரைவருக்கு பணத்தை திரும்பசெலுத்தாத பைனான்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Dharmaraj ,Thenthamaraikulam ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது