×

விவசாயிகள், பாமகவினர் ஆர்ப்பாட்டம்: அறிவுசார் நகரம் அமைப்பதற்கு எதிர்ப்பு


ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் அறிவுசார் நகரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் மற்றும் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம், கல்பட்டு, ஆவாஜிபேட்டை, எர்ணாங்குப்பம் போன்ற பகுதிகளில் சுமார் 1,703 ஏக்கர் பரப்பளவில் தழிழக அரசு அறிவுசார் நகரம் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தது. இதை கண்டித்து ஊத்துக்கோட்டையில் விவசாயிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இணைந்து, அறிவுசார் நகரம் அமைவதை கண்டித்து, விஏஒ அலுவலகம் அருகில் நேற்று மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் பாமக வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் முனுசாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜெயபால், பிரபாகரன், இளைஞர் சங்க செயலாளர் சுதாகர், தலைவர் அன்பு, வன்னியர் சங்க செயலாளர் டில்லிபாபு, மாவட்ட துணைச்செயலாளர் தனசேகர் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அறிவுசார் நகரம் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி அனைவரும் ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர்

The post விவசாயிகள், பாமகவினர் ஆர்ப்பாட்டம்: அறிவுசார் நகரம் அமைப்பதற்கு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Bamakavins ,Enambakkam ,Periyapalayam ,Ellapuram Union ,
× RELATED ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில்...