×

தண்டனை, குற்றவியல், சாட்சியங்கள் சட்ட வரைவு அறிக்கையை நாடாளுமன்ற நிலை குழு மாநிலங்களவை தலைவரிடம் சமர்ப்பித்தது

புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சக்ஷயா ஆகிய பெயர்களிலான சட்டங்களை கொண்டு வருவது தொடர்பான மசோதாவை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இவை நடைமுறைக்கு வந்தால் பழைய சட்டங்கள் ரத்து செய்யப்படும்.

இந்த மசோதாக்கள் மறுஆய்வுக்காக உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இவற்றைப் புதிய மசோதாக்களுடன் மாற்றுவது தொடர்பான வரைவு அறிக்கைகளை தயாரிப்பதற்காக கடந்த 27ம் தேதி நாடாளுமன்ற நிலைக்குழு கூடியது. இந்நிலையில், உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவர்பிரிஜ் லால் நேற்று மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கரை சந்தித்து சட்ட மசோதாக்களுக்கான 3 வரைவு அறிக்கைகளை சமர்ப்பித்தார். இதனை உறுதிப்படுத்தி துணை ஜனாதிபதியின் செயலாளர் அவரது டிவிட்டரில் இந்த செய்தியை பதிவிட்டுள்ளார்.

The post தண்டனை, குற்றவியல், சாட்சியங்கள் சட்ட வரைவு அறிக்கையை நாடாளுமன்ற நிலை குழு மாநிலங்களவை தலைவரிடம் சமர்ப்பித்தது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Interior Minister Amitsha ,Parliamentary Standing Committee of the States ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...