×

உலகில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட ‘சிக்குன்குனியா’ தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி: இந்திய கடைகளிலும் கிடைக்கும்

நியூயார்க்: சிக்குன்குனியா நோயிலிருந்து விடுபடுவதற்காக ‘இக்சிக்’ தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். அந்த தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய பயோடெக் நிறுவனமான ‘வால்னேவா’ என்ற நிறுவனம் தயாரித்த ‘இக்சிக்’ என்ற தடுப்பூசியானது, கொசுக்கள் மூலம் ‘சிக்குன்குனியா’ வைரஸ் காய்ச்சலுக்கு எதிராக தயாரிக்கப்பட்டது. இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய ‘சிக்குன்குனியா’ வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், இந்த தடுப்பூசி கண்டறியப்பட்டது.

உலகில் முதல் முறையாக ‘சிக்குன்குனியா’ வைரஸ் தொற்றுக்காக கண்டறியப்பட்ட தடுப்பூசி இதுவாகும். இந்த தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க அமெரிக்க சுகாதார துறை ஒப்புதல் அளித்துள்ளது. இனிமேல் ‘இக்சிக்’ தடுப்பூசியானது சில மருந்து கடைகளில் கிடைக்கும் என்றும், ஒரு டோஸ் போட்டுக் கொண்டாலே, ‘சிக்குன்குனியா’ வைரஸ் பாதிப்பில் இருந்து மீளலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்காக இந்த தடுப்பூசி தயாரிக்கப்பட்டதாக மருத்துவ நிபுணர்கள் கூறினர்.

The post உலகில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட ‘சிக்குன்குனியா’ தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி: இந்திய கடைகளிலும் கிடைக்கும் appeared first on Dinakaran.

Tags : US ,New York ,United States ,Dinakaran ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...