×

பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க டெல்லியில் ‘டூ பிளஸ் டூ’ மாநாடு: இந்திய – அமெரிக்க அமைச்சர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: இந்தியா – அமெரிக்க இடையிலான வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் 2+2 கூட்டம் ெடல்லியில் இன்று நடைபெறுகிறது. இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்தில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்றிரவு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் டெல்லி வந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

அமெரிக்கா சார்பில் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் அமெரிக்க அமைச்சர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. முன்னதாக, 2+2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தையின் போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை குறித்து விவாதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இருதரப்பு விவகாரங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம், ரஷ்யா – உக்ரைன், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்கள் குறித்தும் இரு தரப்பும் விவாதிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க டெல்லியில் ‘டூ பிளஸ் டூ’ மாநாடு: இந்திய – அமெரிக்க அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Two plus two' conference ,Delhi ,New Delhi ,+2 ,India ,US ,and Defence Ministers ,Two Plus Two' ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...