×

கர்நாடகா: ஹாசனில் உள்ள ஹாசனம்பா அம்மன் கோயில் விழாவில் இரும்பு தடுப்பில் மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு

கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசனில் ஹாசனம்பா அம்மன் கோயில் விழாவில் இரும்பு தடுப்பில் மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஹாசன் மாவட்டத்தில் ஹாசனம்பா அம்மன் கோயிலில் தரிசனம் செய்து கொண்டிருந்தபோது இரும்பு தடுப்பில் மின்சாரம் பாய்ந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒருவர் மேல் ஒருவர் விழுந்து வெளியேறியதால் பலர் படுகாயமடைந்தனர். இரும்பு தடுப்பில் மின்சாரம் பாய்ந்ததால், உயிரை காப்பாற்றிக் கொள்ள பக்தர்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயற்சி செய்தனர். ஒரே நேரத்தில் பலரும் வெளியேற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து நிலைமையை சீர்செய்தனர்.

நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 50 பேருக்கு சிகிச்சை

உடனடியாக கீழே விழுந்த பக்தர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோயில் விழாவில் மின்கசிவு ஏற்பட்டதில் பக்தர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post கர்நாடகா: ஹாசனில் உள்ள ஹாசனம்பா அம்மன் கோயில் விழாவில் இரும்பு தடுப்பில் மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Hassanamba Amman Temple Festival ,Hassan. ,Hassan, Karnataka ,Hassanamba Amman Temple Festival in ,Hassan ,Dinakaran ,
× RELATED கர்நாடக நிலச்சரிவு: உயிரிழந்த...