×

ரயிலில் பட்டாசுகளை எடுத்து செல்ல வேண்டாம்: விதியை மீறினால் கடும் நடவடிக்கை.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!!

சென்னை: பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்ல வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை 12ம் தேதி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பணியாற்றி வரும் ஊர்களில் இருந்து பட்டாசுகளை வாங்கி சொந்த ஊருக்கு எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விதிகளை மீறி பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்ல வேண்டாம் என்று தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இரயில் நிலையங்களில் 1,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயிலில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், பாதுகாப்பான தீபாவளிக்கு ரயில் பயணிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

The post ரயிலில் பட்டாசுகளை எடுத்து செல்ல வேண்டாம்: விதியை மீறினால் கடும் நடவடிக்கை.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை..!! appeared first on Dinakaran.

Tags : Southern ,Chennai ,Diwali festival ,Tamilnadu ,Southern Railway ,
× RELATED வேலை வாங்கி தருவதாக மோசடி உஷாராக...