×

தமிழக அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: தான் படித்த கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கிய விஞ்ஞானி வீரமுத்துவேல்

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தான் படித்த 4 கல்லூரிகளுக்குப் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் நன்கொடையாக வழங்கினார். நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இந்திய வின்வேளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் 3 திட்டத்தில் வின்கலனை வெற்றிகரமாக நிலவில் தரையிரக்கி சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது. உலகமே இந்தியாவை திரும்பி பார்க்கும் அளவுக்கு சந்திரயான் – 3 திட்டம் வெற்றி பெற்றது. இந்த திட்டத்தின் திட்ட இயக்குநராக தமிழ்நாட்டை சேர்ந்த வீர முத்துவேல் பணியாற்றினார்.

அவரின் தலைமையிலேயே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. சந்திரயான் 3 சாதனையை தொடர்ந்து உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தது. இந்நிலையில், இஸ்ரோவில் பணியாற்றிய தமிழக விஞ்ஞானிகளை கௌரவிக்கும் விதமாக கடந்த மாதம் 2ம் தேதி தமிழக அரசு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு- மிளிரும் தமிழர்கள்’ என்ற பெயரில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா, வீரமுத்துவேல் உள்ளிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள் 9 பேரை பாராட்டி தலா ரூ.25 லட்சம் வீதம் ஊக்கத்தொகை தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் பரிசு தொகையை தான் படித்த கல்லூரிகளுக்கு வீரமுத்துவேல் வழங்கியுள்ளார். அதன்படி தான் படித்த விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. உள்ளிட்ட நான்கு கல்வி நிறுவனங்களுக்கு அவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

The post தமிழக அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை: தான் படித்த கல்லூரிகளுக்கு நன்கொடையாக வழங்கிய விஞ்ஞானி வீரமுத்துவேல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Weeramuthuvel ,Chennai ,ISRO ,
× RELATED ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை...