×

துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது

திருமங்கலம், நவ.10: மதுரை அவனியாபுரத்தினை சேர்ந்தவர் கிஷோர்(48). மதுரை ரேஸ்கோர்ஸ்காலனியில் உள்ள மதுரை ரைபிள் கிளப்பின் ஆயுட்கால உறுப்பினராக உள்ளார். இதன் காரணமாக துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு வந்துள்ளார். இந்தநிலையில் திருமங்கலம் அருகே மறவன்குளத்தினை சேர்ந்த ரூபன்பீட்டர்(59) என்பவர், தற்போது மதுரை அழகப்பன்நகரில் வசித்து வருகிறார். இவரும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிபெற்று மதுரை ரைபிள் கிளப்பில் உறுப்பினராக உள்ளார். இவர் பயன்படுத்திய துப்பாக்கி வெளிநாட்டு துப்பாக்கி போல் இருந்தது. அதே நேரத்தில் இந்த துப்பாக்கிக்கு ஏற்கனவே பெற்றுள்ள உரிமத்தினை ரூபன்பீட்டர் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த கிஷோர் இது குறித்து திருமங்கலம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் லட்சுமிலதா விசாரணை நடத்தினார். அப்போது துப்பாக்கியின் உதிரிபாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தியதாகவும், திண்டுக்கல் வீரமணி என்பவர் மூலமாக அவற்றை பெற்றதாகவும் ரூபன்பீட்டர் கூறினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரூபன்பீட்டர் மற்றும் வீரமணி ஆகியோரை கைதுசெய்தனர். அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தேனி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumangalam ,Kishore ,Avaniyapuram, Madurai ,Madurai Rifle Club ,Madurai Racecourse Colony.… ,Dinakaran ,
× RELATED திருமங்கலம் நேசனேரியில் புதிய பள்ளி...