பேரையூர் / திருமங்கலம், நவ. 10: பேரையூர் தாலுகா, சேடபட்டி பகுதியிலுள்ள கண்மாய் மற்றும் ஊரணி பகுதிகளில் உள்ள முட்புதர்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலிருந்து வந்த புள்ளிமான்கள் வாழ்கின்றன. தற்போதைய தொடர் மழையால் அவை வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் புள்ளிமான்கள் மாற்று இடம் தேடி வெளியேறி வருகின்றன. இந்தநிலையில் நேற்று சேடபட்டி அரசு மருத்துவமனை அருகில் நாய்களிடம் ஒரு பெண் புள்ளிமான் சிக்கிக்கொண்டது. அப்போது நாய்கள் கடித்து குதறியதில் புள்ளிமான் பரிதாபமாக பலியானது. தகவலறிந்த சாப்டூர் வனத்துறையினர் மானின் உடலை மீட்டு இறுதிச்சடங்குகள் செய்தனர்.
* இதேபோல் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உலவுகின்றன. நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் அருகே ராயபாளையம் கிராமத்தில், தனியார் மண்டபம் அருகே கம்பிவேலியை தாவிச்செல்ல பெண் புள்ளிமான் முயன்றுள்ளது. அப்போது அது வேலியில் சிக்கியது. கிராம மக்கள் புள்ளிமானை பாதுகாப்பாக மீட்க முயன்றனர். அது அச்சமடைந்தால் கண்களை கட்டி மீட்டு, சாப்டூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
The post நாய்கள் கடித்து புள்ளிமான் பலி கம்பி வேலியில் சிக்கிய மான் மீட்பு appeared first on Dinakaran.