×

முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய மேலும் ஒருவர் கைது மணல் கடத்தலை வீடியோ எடுத்தபோது

பொன்னை, நவ.10: பொன்னை அடுத்த எருக்கம் பட்டில் மணல் கடத்தலை தடுக்க வீடியோ எடுத்த முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த கொக்கேரி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் உமாபதி. இவர் பொன்னையாற்றில் அணைக்கட்டு பகுதியில் மணல் கடத்தலை வீடியோ எடுத்ததற்காக இவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முனிசாமி அவருடைய தம்பி குமரேசன் மற்றும் முனிசாமியின் இரு மகன்கள் சூர்யா, பிரகாஷ் மீது மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் முனுசாமியின் தம்பி குமரேசன் கடந்த 3ம்தேதி கைது செய்யப்பட்ட நிலையில் முனிசாமி மற்றும் அவரது மகன்கள் சூர்யா பிரகாஷ் உள்ளிட்டோரை பிடிக்க காட்பாடி டிஎஸ்பி பழனி தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். மேலும், குற்றவாளிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான முனுசாமியை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முனுசாமி மகன்கள் சூர்யா, பிரகாஷ் உள்ளிட்டோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

The post முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய மேலும் ஒருவர் கைது மணல் கடத்தலை வீடியோ எடுத்தபோது appeared first on Dinakaran.

Tags : Ponnai ,Erukum Patt ,
× RELATED 10ம் நூற்றாண்டு கல்வெட்டுகள்...