×

மயிலாடி அருகே எலக்ட்ரீசியன் விஷம்குடித்து தற்கொலை

அஞ்சுகிராமம், நவ.10: மயிலாடி அருகே லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சிவகுமார் (48). எலக்ட்ரீஷியன். அவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11 மற்றும் 12 வது படித்து வருகிறார்கள். சிவகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு வீட்டில் பிரச்னை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 5ம் தேதி மது அருந்திவிட்டு வீட்டில் மனைவியுடன் வாய்த்தகராறு செய்து பிரச்னை ஏற்படுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்தவர் வீட்டில் இருந்த மருந்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர் மனைவியிடம் நான் விஷம் குடித்து விட்டேன் என்று கூறி உள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி ஜெயலட்சுமி அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post மயிலாடி அருகே எலக்ட்ரீசியன் விஷம்குடித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Mailadi ,Anjugram ,Sivakumar ,Letsumipuram ,Jayalakshmi ,
× RELATED ஊருக்குள் புகுந்த புள்ளிமான் மீட்பு