×

காரைக்காலில் ரூ.3.71 கோடியில் நலத்திட்ட உதவி

 

காரைக்கால், நவ.10: புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் காரைக்கால் மாவட்டத்தில் அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் ரூ.3 கோடியே 71 லட்சத்து 47 ஆயிரத்து 194 ரூபாய் மதிப்பீட்டில் திருமண உதவி தொகை,பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவி தொகை, நீண்ட கால நோய் வாய் பட்டவர்களுக்கு உதவி தொகை, கலப்பு திருமண உதவி தொகை, வீடு கட்டும் திட்ட தொகைகள் மற்றும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைகள் வழங்கப்பட்டது.

நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவி தொகைகளை வழங்கினார். காரைக்கால் வடக்கு தொகுதியில் எம்எல்ஏ திருமுருகன் கலந்து கொண்டு உதவி தொகை காசோலைகளை வழங்கினார். இதில் ஆதிதிராவிடர் நலத்துறை துணை இயக்குனர் மதன்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post காரைக்காலில் ரூ.3.71 கோடியில் நலத்திட்ட உதவி appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Puducherry Adi Dravidar welfare department ,welfare department ,
× RELATED காரைக்கால் கடற்கரையில் காவல்நிலைய பூத் அமைக்கும் பணி