×

ஜெயங்கொண்டம் அருகே சைக்கிள் மீது பைக் மோதி விபத்து: முதியவர் உள்பட 2 பேர் பலி

 

ஜெயங்கொண்டம், நவ.10: ஜெயங்கொண்டம் அருகே சின்னக்கல்லேரி கிராமம் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தராஜ் (35). இவர் ஜெயங்கொண்டத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது சைக்கிளில் வந்த ஆமணக்கந்தோண்டி கிராமத்தை சேர்ந்த வீரப்பெருமாள் (85) என்பவர் பின்னால் வரும் வாகனத்தை கவனிக்காமல் திடீரென்று சாலையில் திரும்பினார். அப்போது வசந்தராஜ் பைக் சைக்கிள் மீது மோதியது.

இதில் வீரபெருமாள் பலத்த காயமடைந்தார். அப்போது நிலை தடுமாறிய பைக் எதிரே வந்த கார் மீதும் மோதியது. இதில் வசந்தராஜா, வீரப்பெருமாள் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காரை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே சைக்கிள் மீது பைக் மோதி விபத்து: முதியவர் உள்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Jayangondam ,Vasantraj ,Temple Street, Chinnakallery village ,Dinakaran ,
× RELATED நரசிங்கபாளையம் கிராமத்தில் இருந்து...