×

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலக மேம்பாட்டு பணிக்கு ரூ.30 லட்சம்

 

தஞ்சாவூர்,நவ.10: தஞ்சாவூர் மாவட்ட மைய நூலக மேம்பாட்டு பணிக்கு ரூ.30 லட்சம் நிதி உதவி டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்ஏ வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் புதிய ஜெராக்ஸ் இயந்திரம் வாங்குவதற்கும், ஒளிதிரை அமைப்பதற்கும், கழிப்பறை வசதி அமைப்பது ஆகிய மேம்பாட்டு பணிக்கு ரூ.30 லட்சத்தை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து டி.கே.ஜி.நீலமேகம் எம்எல்ஏ., ஒதுக்கினார். இந்த நிலையில் இந்த மேம்பாட்டு நிதியை அவர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், தமிழ்நாடு சட்டப்பேரவை நூலக குழு தலைவர் சுதர்சனம் எம்எல்ஏ. ஆகியோரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் மாவட்ட மைய நூலக மேம்பாட்டு பணிக்கு ரூ.30 லட்சம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur district ,Thanjavur ,Thanjavur District Central Library Development Project ,T.D. K. G. Blue Cloud ,MLA ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...