×

கோரிசோலை தர்காவில் சந்தனக்கூடு விழா

 

ஊட்டி, நவ‌.10: ஊட்டி அருகே கோரிசோலை தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது. ஊட்டி அருகே கோரிசோலை பகுதியில் உள்ள ஹஜ்ரத் சையது ஹசன் ஷா பாபா காதிரி ரஹ்மத்துல்லா தர்காவில் வருடாந்திர உரூஸ் சந்தனக்கூடு விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு காலையில் பிறைக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தர்காவில் சந்தனம் பூசல் நிகழ்வு நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். விழாவை ஒட்டி தர்கா முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. விழா ஏற்பாடுகளை முத்தவல்லி நூர் முகமது உமர் சேட் தலைமையில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post கோரிசோலை தர்காவில் சந்தனக்கூடு விழா appeared first on Dinakaran.

Tags : Sandalwood Festival ,Korizolai Darga ,Ooty ,Sandalwood ,Korisolai dargah ,Korisolai Dharga ,Dinakaran ,
× RELATED ஊட்டி பூங்காவில் பூத்துக்குலுங்கும் வண்ண, வண்ண ரோஜா மலர்கள்