×

பயணிகள் குறைதீர் உதவி மைய எண் மாற்றம்: போக்குவரத்து துறை தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஒருங்கிணைந்த பயணிகள் குறைகள் மற்றும் புகார்கள் அளிக்கும் உதவி மைய எண் 149 ஆக மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கை: அரசு போக்குவரத்துக் கழக பேருந்து இயக்கம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா உதவி மைய எண் “1800 599 1500” என்ற 11 இலக்க எண்ணை, கடந்த மார்ச் 9ம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். தற்போது வரை இந்த எண் உபயோகத்தில் இருந்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்த 11 இலக்க உதவி மைய எண்ணை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள இயலவில்லை என்று பெறப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், இன்று முதல் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள ஏதுவாக கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் (149) அறிமுகப்படுத்தப்படுகிறது. மேற்படி மூன்று இலக்க புதிய உதவி மைய எண் 149ஐ தொடர்பு கொண்டு, பொதுமக்கள் மற்றும் பயணிகள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம்.

The post பயணிகள் குறைதீர் உதவி மைய எண் மாற்றம்: போக்குவரத்து துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Government Transport Corporations ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...