×

தயார் நிலையில் மருத்துவமனைகள்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்

சென்னை: தீபாவளி நெருங்கும் நிலையில் அனைத்து மருத்துவமனைகளும் தேவையான மருந்துகள் உடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் தேவையான கையிருப்புகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். போதுமான அளவு ரத்த இருப்பு வைத்து இருக்க வேண்டும். பொதுமக்கள் கையில் பட்டாசு வைத்து வெடிக்க கூடாது, மூச்சு பிரச்சனை இருந்தால் அவர்கள் வீட்டில் இருப்பது நல்லது. மின்சார கம்பம் அருகில் பட்டாசு வெடிக்க கூடாதுஎன சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

The post தயார் நிலையில் மருத்துவமனைகள்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Public Health ,Chennai ,Diwali ,Public Health Department ,Dinakaran ,
× RELATED கால்நடை துறையுடன் இணைந்து பறவை...