×

அதிருப்தி ஏற்படுவதை தடுக்க காங். எம்எல்ஏக்களை தினமும் சந்திக்க டி.கே.சிவகுமார் முடிவு

பெங்களூரு: காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியடையாமல் தடுத்து அவர்களை அரவணைத்து செல்லும் விதமாக தினமும் காலை எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், அப்போது அவர்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்படும் என்று துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், ‘கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தினமும் காலை உணவு கூட்டங்களை நடத்தவுள்ளேன். நான் பெங்களூருவில் இல்லாத நாட்களை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த கூட்டம் நடக்கும். அந்த கூட்டங்களின் போது, எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்படும் என்று கூறினார்.

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஒத்துழைப்பும், உழைப்பும் தேவை என்பதால் அவர்களை அதிருப்தியடையவிடாமல் உற்சாகமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அவர்களுடன் டி.கே.சிவகுமார் தினமும் ஆலோசனை கூட்டங்களை நடத்தவுள்ளார். காங்கிரஸ் கட்சிக்குள் 3 அதிகார மையங்கள் பேசப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவகுமார், சித்தராமையா ஒருவரே முதல்வர். நான் கட்சி தலைவர். கட்சிக்குள் அதிகார மோதல் எதுவும் கிடையாது என்றார்.

The post அதிருப்தி ஏற்படுவதை தடுக்க காங். எம்எல்ஏக்களை தினமும் சந்திக்க டி.கே.சிவகுமார் முடிவு appeared first on Dinakaran.

Tags : Kong ,K. Sivakumar ,Bangalore ,Congress ,M. L. ,
× RELATED மேகதாது நீர்தேக்க அணையின் கட்டுமானப்...