×

2 மாவோயிஸ்டுகளுக்கு 5 நாள் போலீஸ் காவல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பெரியா அருகே சப்பாரம் காலனியில் உள்ள அனீஷ் என்பவரின் வீட்டுக்கு 2 நாட்களுக்கு முன் இரவு 5 மாவோயிஸ்ட்டுகள் வந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். அங்கு வந்த போலீசுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் வீட்டுக்குள் பதுங்கி இருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த உண்ணிமாயா (31), பொள்ளாச்சியை சேர்ந்த சந்துரு (36) ஆகிய 2 பேர் பிடிபட்டனர்.

லதா, சுந்தரி உள்பட 3 பேர் காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர். இவர்களில் ஒருவருக்கு துப்பாக்கி சண்டையின் போது காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட சந்துரு, உண்ணிமாயா ஆகிய 2 பேரும் கல்பெட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

The post 2 மாவோயிஸ்டுகளுக்கு 5 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.

Tags : Maoists ,Thiruvananthapuram ,Anish ,Chapparam Colony ,Beriya, Wayanad District, Kerala ,
× RELATED சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில்...