×

காசாவிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஓட்டம் தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்: அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகளின் சமரசத்தை ஏற்று இஸ்ரேல் சம்மதம்

கான்யூனிஸ்: அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கும் ஏற்பட்ட மோதல் இன்று 35வது நாளை எட்டிவிட்டது. இதனால் இருதரப்பிலும் பலி எண்ணிக்கை உயர்ந்து விட்டது. இஸ்ரேல் நடத்திய இடைவிடாத குண்டுவெடிப்பில் 10,500க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம் இஸ்ரேலில் 1,400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், தரைவழித் தாக்குதல் தொடங்கியதில் இருந்து காசாவில் 32 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.

நேற்று இரவு முதல் விடிய விடியா காசா பகுதிக்குள் தரைவழியாக நுழைந்து இஸ்ரேல் படைகள் அதிரடி தாக்குல் நடத்தின. ஒருபுறம் விடிய விடிய குண்டு மழை பொழியப்பட்டது. தரைப்படைகள் அடர்ந்த நகர்ப்புறங்களில் ஹமாஸ் போராளிகளுடன் சண்டையிட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் இஸ்ரேல் படையை எதிர்கொள்ள முடியாமல் தப்பி ஓடினார்கள். நேற்று முன்தினம் மட்டும் 50 ஆயிரம் பேர் தப்பி ஓடிவிட்டார்கள். டவுன்டவுனின் மையத்தில் உள்ள ஷிபா மருத்துவமனையில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இஸ்ரேல் படைகள் நெருங்கி விட்டன.

இதனால் காசாவில் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. எனவே போர் நிறுத்தத்திற்காக அமெரிக்கா, ஈராக், கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பினர் பிடித்த பிணையக்கைதிகளை விடுதலை செய்வதற்கு முன்பு எந்தவித போர் நிறுத்தத்தையும் அறிவிக்க முடியாது என்று இஸ்ரேல் தரப்பினர் தெரிவித்து விட்டனர். காசாவில் தற்போது ஹமாஸ் பிடியில் 240 பிணைக்கைதிகள் இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. தெற்கில் இருந்து காசாவுக்குள் நுழையும் உதவிகள் வடக்கே செல்வதற்குப் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தண்ணீர் கூட கிடைக்கவில்லை. அதே சமயம் காசாவில் எந்தவித உதவியும் இல்லாமல் தவித்து வரும் அப்பாவி மக்களுக்காக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்க வேண்டும் என்று பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக மேற்கத்திய நாடுகள் மற்றும் அரபு நாடுகள் உள்ளிட்ட 50 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

இந்த நிலையில் அமெரிக்கா, ஈராக், கத்தார் ஆகிய நாடுகளின் வேண்டுகோளை ஏற்று தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் நேற்று ஒப்புக்கொண்டது. அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு ஏற்பட் டது. பொதுமக்கள் தப்பித்துச்செல்ல உதவியாக இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

* 130 சுரங்கப்பாதைகள் அழிப்பு
காசா நகரில் நுழைந்த இஸ்ரேல் படைகள் அங்கு ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த 130 சுரங்கப்பாதைகளை அழித்து விட்டனர். இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

* சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்: 9 பேர் பலி
ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அமெரிக்க படைகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க படைகள் மீது சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு போராளிகள் தாக்குதல் நடத்தி வந்தனர். அவர்களை குறிவைத்து நேற்று 2 அமெரிக்க எப் 15 ரக போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. மேலும் ேபாராளிகளின் ஆயுத கிடங்கு மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post காசாவிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் ஓட்டம் தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம்: அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகளின் சமரசத்தை ஏற்று இஸ்ரேல் சம்மதம் appeared first on Dinakaran.

Tags : Gaza ,fire ,Israel ,US ,Egypt ,Qatar ,Kanunis ,Dinakaran ,
× RELATED ஒளிபரப்பு தடை செய்யப்பட்ட நிலையில்...