×

தெலுங்கு, இந்தியில் அலியா பட் நடித்த படத்துக்கு சிக்கல்

சென்னை: இந்தியில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் அலியா பட் நடித்துள்ள படம், ‘கங்குபாய் கதியாவாடி’. இப்படம் வரும் ஜனவரி 6ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிப்ரவரி 18ம் தேதி ரிலீசாகும் என்று கூறப்பட்டுள்ளது. கதையின் நாயகியாக அலியா பட் நடித்துள்ள இப்படத்தின் உரிமையையும், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், அஜய் தேவ்கன், அலியா பட் நடித்துள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இந்தி உரிமையையும் ஜெயந்திலால் கடா வாங்கியுள்ளார். ‘ஆர்ஆர்ஆர்’ படம் ஒரே ேநரத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் ஜனவரி 7ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இப்படத்திலும் அலியா பட் நடித்திருப்பதால், ‘கங்குபாய் கதியாவாடி’ ரிலீஸ் தேதியை மாற்ற சஞ்சய் லீலா பன்சாலியை ஜெயந்திலால் கடா சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்காக எஸ்.எஸ்.ராஜமவுலி நன்றி தெரிவித்துள்ளார்….

The post தெலுங்கு, இந்தியில் அலியா பட் நடித்த படத்துக்கு சிக்கல் appeared first on Dinakaran.

Tags : alya butt ,Chennai ,Sanjay Leela Panzali ,Alia Butt ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...