×

10 மணி நேர தொடர் தாக்குதலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஜபாலியா நகரை கைப்பற்றியது இஸ்ரேல்..!!

காசா: 10 மணி நேர தொடர் தாக்குதலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஜபாலியா நகரை இஸ்ரேல் கைப்பற்றியது. சுரங்கப் பாதைகளில் மறைந்திருந்த ஹமாஸ் இயக்கத்தினருடன் இஸ்ரேல் ராணுவம் கடும் மோதலில் ஈடுபட்டது. இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மழலையர் பள்ளி அருகே இஸ்ரேல் ராணுவம்- ஹமாஸ் இடையே மோதல் ஏற்பட்டது. ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கப் பாதைகள் இதுவரை அழிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

The post 10 மணி நேர தொடர் தாக்குதலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த ஜபாலியா நகரை கைப்பற்றியது இஸ்ரேல்..!! appeared first on Dinakaran.

Tags : Israel ,Hamas ,Jabalia ,Gaza ,Jabaliya ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் தலைநகர் மீது ஏவுகணைகளை ஏவி ஹமாஸ் போராளிக்குழு தாக்குதல்