×

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகாரில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறிக்க பரிந்துரை..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகாரில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகார் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கொடுத்த புகார் குறித்து நாடாளுமன்ற நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தியது. நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 எம்.பி.க்களில் 6 பேர் மொய்த்ராவை நீக்க வலியுறுத்தியுள்ளனர். நாடாளுமன்ற நன்னடத்தைக் குழுவின் அறிக்கை மக்களவை சபாநாயகரிடம் நாளை அளிக்கப்படும்.

The post நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகாரில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவியை பறிக்க பரிந்துரை..!! appeared first on Dinakaran.

Tags : Parliament ,Mahua Moitra ,DELHI ,MAHUA MOYTRA ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...