×

தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சங்கா பூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்குகளில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி, போக்கரை தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுகிறது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்டவற்றை விளையாடுவதற்கான வயது, நேரம் போன்றவற்றை அரசு நிர்ணயிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து திமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை ஆளுநர் ரவி பல மாதங்கள் கிடப்பில் போட்டிருந்தார். தமிழ்நாடு அரசின் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

The post தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,High Court ,High Court of Chennai ,Tamil Nadu Government ,Court ,Dinakaran ,
× RELATED பொது விநியோக திட்டத்தின் கீழ் மசூர்...